1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 24 அக்டோபர் 2020 (10:37 IST)

பாவம்யா அந்த டைனோசரு.. விட்டுடுங்க! – வைரலாகும் அரியலூர் டைனோசர் மீம்கள்

பெரம்பலூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்கள் டைனோசர் முட்டைகள் என செய்திகள் வெளியானதை தொடர்ந்து இணையத்தில் நெட்டிசன்கள் காமெடி மீம்களாக பதிவிட்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் குன்னம் பகுதி அருகே தூர்வாரும் பணியின்போது கடல் படிமங்கள் மற்றும் முட்டை போன்ற உருளை வடிவ படிமங்கள் ஏராளமாக கண்டுபிடிக்கப்பட்டன. ஆரம்பத்தில் அவை டைனோசர் முட்டைகள் என நம்பப்பட்டாலும் பிறகு அவை சுண்ணாம்பு படிமங்கள் என கூறப்பட்டது. ஆனால் இதற்கு முன்னரே பெரம்பலூர் பகுதியில் டைனோசர் படிமங்கள் முன்னதாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த டைனோசட் முட்டை செய்தி சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பலரும் அதை குறித்த நகைச்சுவை மீம்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் சில உங்களுக்காக….