ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 23 மே 2021 (10:18 IST)

காற்றில் பறந்த விதிமுறைகள்; பேருந்துகளில் குவியும் கூட்டம்!

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அமலாகும் நிலையில் இன்று பேருந்தில் மக்கள் பலர் பயணிக்க குவிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த இரண்டு வாரமாக தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் இருந்து வந்தது. எனினும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் நாளை முதல் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்றும், இன்றும் மட்டும் பேருந்து சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கூட்டம் கூட்டமாக பயணித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்துகளில் 50 சதவீதம் பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என விதிமுறைகள் உள்ள நிலையில், மக்கள் கூட்டம் பேருந்துகளில் அலை மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஊரடங்கு விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக பேருந்துகளில் செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.