எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மது விற்பனையை நிறுத்தாதது ஏன்? நீதிமன்றம் கேள்வி!
கொரோனா காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானங்கள் விற்பனை மட்டும் தாராளமாக நடப்பது ஏன் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலையின் சேதாரங்கள் மிகவும் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளன. அதனால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுபான விற்பனை மட்டும் எப்போதும் போல தாராளமாக நடந்து வருகிறது. இது சம்மந்தமாக திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் நீதிமன்றம் கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மதுபானங்களின் விற்பனைக்கு ஏன் அனுமதி வழங்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்பி, இதுசம்மந்தமாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என வழக்கின் விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.