”காஷ்மீர் பிரச்சனை குறித்து சீன அதிபரும் மோடியும் பேசவில்லை”.. விஜய் கோகுலே
சீன அதிபர் ஜின்பிங்கும் மோடியும் சந்தித்ததை அடுத்து, இது குறித்து பேசிய வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசப்படவில்லை என கூறியுள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்தித்த போது உரையாடிய விஷயங்கள் குறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே நிரூபர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், இந்தியா-சீனா இடையேயான உறவில் இரு நாட்டு மக்களையும் தொடர்புபடுத்துவது பற்றி பேசியதாகவும், மேலும் இந்தியா-சீனா இடையே இருக்கும் வர்த்தக பற்றாக்குறையை பற்றி விவாதிக்க உயர்மட்டக்குழு அமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
குறிப்பாக இரு தலைவர்கள் சந்திப்பின் போது காஷ்மீர் விவகாரம் குறித்து பேசப்படவில்லை எனவும், ஆனால் இந்தியா வருவதற்கு முன்பு, சீன அதிபரை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்தித்து பேசியது குறித்து உரையாடியதாகவும் கூறியுள்ளார்.
மேலும் சீனாவில் உள்ள தமிழ் ஆலயங்கள் பற்றி ஆய்வு செய்வது பற்றி ஆலோசிக்கபடும் என கூறியது குறிப்பிடத்தக்கது.