1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: சனி, 12 அக்டோபர் 2019 (16:29 IST)

லலிதா ஜுவல்லரியின் 11 கிலோ நகை மீட்பு..

லலிதா ஜுவல்லரியில் ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது 11 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பிரபலமான லலிதா ஜுவல்லரியில் ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளையை குறித்து போலீஸார் விசாரணை நடத்திவந்த நிலையில், திரூவாரில் மணிகண்டன் என்பவர் 5 கிலோ நகையுடன் கைதானார்.

அவருடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்ட சீராத்தோப்பு சுரேஷ் என்பவரை போலீஸார் தேடி வந்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்துக்கு முருகன் தான் தலைவன் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சுரேஷ், செங்கம் கோர்ட்டிலும், முருகன் பெங்களூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும் சரணடைந்தார்.

இந்நிலையில் முருகன் அளித்த தகவலின் பேரில் பெங்களூர் போலீஸார் மீட்டு கொண்டு சென்றபோது, பெரம்பலூர் போலீஸார் துரத்தி சென்று மீட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.