1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 13 ஜூலை 2020 (23:35 IST)

ATM மையத்திற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய நபர்கள்...

நீண்ட நாட்களாக திறக்காமல் இருந்த எடிஎம் மையத்தைப் பூட்டிய  மக்கள் அதற்கு மெழுகு வர்த்தி ஏற்றி,  கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமர் மாவட்டம்  மேக்காமண்டபம் பகுதியில் இயங்கிவரும் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் ஏடிஎம். சேவை மையம் சுமார் 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பயன்பட்டு வந்தது. மக்கள் இதில் பணம் செலுத்தியும் எடுத்தும் வந்தனர்.

இந்நிலையில்.,  இந்த ஏ.டி.எம் மையம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில வாரங்களில் பூட்டுப் போட்டு தற்போதுவரை செயல்படாமல் உள்ளது.

இதனால் மக்கள் பலகிலோ மீட்டர்  தூரன் சென்று ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுத்து வருகின்றன.

இந்நிலையில், யாரோ சிலர் இந்த ஏடிஎம் மையத்திற்கு மெழுகு வர்த்தி ஏற்றி வைத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.