உதவி கேட்ட சிறுமியிடம் அத்துமீறிய 8 பேர் – 2 சிறுவர்கள் உட்பட அனைவரும் கைது!
கன்னியாகுமரியில் வறுமையில் வாடும் சிறுமி ஒருவர் உதவி கேட்க, அவரை பாலியல் ரீதியாக 8 பேர் துன்புறுத்தியுள்ளனர்.
கன்னியாகுமரி தேங்காய் பட்டணத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என சொல்லப்படுகிறது. லாக்டவுன் காரணமாக அவருக்கு எந்த வேலையும் இல்லாததால் குடும்பத்தில் வறுமை தலைவிரித்து ஆடியுள்ளது. இதனால் அவர்களது 8 வயது சிறுமி அக்கம் பக்கத்து வீடுகளுக்கு சென்று உதவி கேட்டுள்ளார்.
அவருக்கு உதவி செய்த சிலர் அதை சாதகமாக ஆக்கிக்கொண்டு அந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளனர். இதில் 4 பேர் 50 வயதைக் கடந்த முதியவர்கள் என்பதும் 2 பேர் 18 வயதுக்குக் கம்மியான மைனர் சிறுவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதையடுத்து சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை சொல்ல அவர் அதை ஆடியோவாக எடுத்து போலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.