ஆள விடுங்கடா சாமி! சொந்த ஊருக்கு தெறித்து ஓடும் டுப்ளிகேட் சென்னை வாசிகள்!!
சென்னைக்கு பிழைப்பிற்காக வந்த சிலர் பயத்தால் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல படையெடுக்கின்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. முக்கியமாக சென்னையில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்புகள் உள்ளது.
மத்திய அரசால் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மெட்ரோ நகரங்களில் சென்னையும் இடம் பெற்றுள்ளது. மொத்தமாக சென்னையில் 1,210 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர். 226 பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னையில் அதிகபட்சமாக திரு.வி.க நகரில் 287 பேருக்கும், ராயப்புரத்தில் 200 பேருக்கும் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன, கோடம்பாக்கத்தில் 177 பேரும், அண்ணா நகரில் 107 பேரும், தண்டையார்பேட்டையில் 97 பேரும் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாவதால் அரசு மருத்துவமனைகள் நிரம்பியுள்ளது. எனவே, சென்னைக்கு பிழைப்பிற்காக வந்த சிலர் பயத்தால் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல படையெடுக்கின்றனர்.
காவல்துறையினரிடம் உரிய அனுமதி பெற்றால் மட்டுமே மற்ற மாவட்டங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதனால் தென்மாவட்டங்களுக்கு செல்ல முயற்சிப்பவர்கள் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் தடுத்த நிறுத்தப்பட்டு உள்ளனர்.
உரிய அனுமதி உள்ளவர்களுக்கு மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் நிலையில் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் ஏரளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.