1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 15 டிசம்பர் 2023 (10:58 IST)

நிவாரண டோக்கன்.. ரேசன் கடையில் குவிந்த பொதுமக்கள்.. வாக்குவாதத்தால் பரபரப்பு..!

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் இதற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது.

ஆனால் வீடு வீடாக வந்து டோக்கன் கொடுப்பது தெரியாத சில பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று டோக்கன் வழங்குமாறு  ரேசன் கடை ஊழியர்களுடன்  வாதம் செய்து வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக இன்று காலை நுங்கம்பாக்கம் ரேஷன் கடையில் திடீரென குவிந்த பொதுமக்கள் டோக்கன் கொடுக்குமாறு வலியுறுத்தினார். ஊழியர்கள் வீடு தூரம் டோக்கன் கொண்டு வந்து கொடுப்பார்கள் என்று விளக்கம் அளித்தும் கேட்காமல் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் போலீசார் வரவழைக்கப்பட்டதாகவும் போலீசார் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி அவர்களை கலைந்து போக சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது  

டோக்கன் முறை தேவையற்றது என்றும் நேரடியாக வங்கிகளில் பணம் போடலாம் என்றும் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Edited by Siva