வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 5 ஜூலை 2021 (12:42 IST)

சுற்றுலா தலங்களுக்கு இ-பாஸ் இல்லாமல் செல்லலாம் !

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு இ-பாஸ் இல்லாமல் செல்லலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தகவல். 

 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இதனால் சுற்றுலா தளங்கள் மூடப்பட்டதால் சுற்றுலா தளங்களை நம்பி தொழில் செய்யும் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.
 
இந்நிலையில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா தளங்கள் பயணிகளை வரவேற்க தயாராகி வருகின்றன. தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமான கொடைக்கானலில் 75 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பகுதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வரத்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதனிடையே, தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு இ-பாஸ் இல்லாமல் செல்லலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். சுற்றுலா தளங்களில் 50% நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும் பயணிகளின் விவரம் பதிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.