1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 8 ஏப்ரல் 2024 (15:38 IST)

வட தமிழகத்தில் வெப்ப அலை.. தென் தமிழகத்தில் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தின் வடக்கு பகுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்றும் அதே நேரத்தில் தெற்கு பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் இன்றும் நாளையும் வட தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் வெப்ப அலை வீச கூடும் என்றும் மூன்று முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமான வெப்பம் பதிவாகும் என்றும் தெரிவித்துள்ளது 
 
அதே நேரத்தில் இன்றும் நாளையும் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது 
 
தென்னிந்திய பகுதியில் மேல் வளிமண்டல கீழ இடங்களில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது என்றும் இதன் காரணமாக இன்றும் நாளையும் தென் தமிழக மாவட்டங்கள் உட்பட சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
 சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
Edited by Siva