பெகாசஸ் உளவு சர்ச்சை; செல்போனையே மாற்றிய பிரான்ஸ் அதிபர்!

Prasanth Karthick| Last Modified வெள்ளி, 23 ஜூலை 2021 (09:58 IST)
பெகாசஸ் மென்பொருள் மூலமாக பிரான்ஸ் அதிபரின் செல்போன் ஒட்டு கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் தனது செல்போனை மாற்றியுள்ளார்.

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ தயாரிக்கும் பெகாசஸ் மென்பொருள் உலகம் முழுவதும் உளவு வேலைகளில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த விவகாரம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பெயர் உட்பட 14 நாட்டு தலைவர்கள் பெயர் அடிபட்டுள்ளது. மேலும் பெகாசஸ் மூலமாக பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மெக்ரான் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் பிரான்ஸ் அதிபர் செல்போன் ஒட்டுக்கேட்கப்படவில்லை என முன்னதாக பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்திருந்தது. எனினும் தற்போது பிரான்ஸ் அதிபரின் செல்போன் மற்றும் செல்போன் எண் மாற்றப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்பு கருதி செல்போன் மற்றும் எண் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :