திங்கள், 26 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 9 ஜனவரி 2020 (08:02 IST)

கடவுள் அறிய… கலைஞர் அறிய – வைரல் ஆன பதவிப் பிரமானம் !

கடவுள் அறிய… கலைஞர் அறிய – வைரல் ஆன பதவிப் பிரமானம் !
மதுரை மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி வார்டு உறுப்பினர் பார்வதி லிங்கத்தின் பதவியேற்பு சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பதவியேற்பு விழா கடந்த 6 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடந்தது. இதில் மதுரை மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த மஞ்சம்பட்டி ஊராட்சி 6ஆவது வார்டு உறுப்பினராக பார்வதி லிங்கம் தனது பதவியேற்பில் சொன்ன ஒரு வார்த்தையால் வைரல் ஆகியுள்ளார்.

பதவிப் பிரமானம் செய்து வைக்கும் அதிகாரி சொல்வதை அனைத்தையும் சொல்லும் பார்வதி, கடைசியாக ’கடவுள் அறிய’ என்று சொல்லும் போது மட்டும் அதை சொல்லாமல் ’கலைஞர் அறிய’ என்று சொல்லி பதவிப் பிரமானம் செய்துகொள்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆக தனது டிவிட்டர் பகிர்ந்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் ‘இதைப் பார்க்கையில் என் கண்கள் குளமாகின’ எனத் தெரிவித்துள்ளார்.