1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 10 ஜூலை 2023 (13:59 IST)

பாலியல் உறவு கொண்டதால் நோயாளி உயிரிழப்பு...நர்ஸ் பணி நீக்கம்

இங்கிலாந்து நாட்டில் நோயாளியுடன் நர்ஸ் ஒருவர் ரகசிய உறவில் இருந்த நிலையில், காரில் பாலியல் உறவின்போது  நோயாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

இங்கிலாந்து நாட்டின் வேல்ஸ்  நகரில் உள்ள மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தவர் பெனலோப் வில்லியம்ஸ்( வயது 42). இவர், அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த   நோயாளி ஒருவருடன் ரகசிய உறவில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் பின்புறம் உள்ள கார் ஷெட்டில் ஒரு காரில் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, நோயாளி உயிரிழந்துவிட்டார். எனவே நர்ஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீஸார் விசாரணை நடந்தினர்.

அதில்,  பெனலோப்  வில்லியம்ஸ் அந்த நோயாளியுடன் பாலியல் உறவில் இருக்கும்போது, அவரது இதயம் செயலிழந்து  அரை நிர்வாண கோலத்தில் மாரடைப்பால் இறந்ததுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸா வந்தபோது, பெனலோப் வில்லியம்ஸின் சக நர்ஸ் ஒருவர் அவரை இறந்த நோயாளியை மருத்துவனைக்குக் கொண்டு சென்றதாகவும், இவர்களின் ரகசிய  உறவு பற்றி அவர் பலமுறை எச்சரித்திருப்பதாகவும் இதை வில்லியம்ஸ் அலட்சியம் செய்ததாகவும் தகவல் தெரியவந்தது.

இந்த  நிலையில், நர்ஸ் தொழிலுக்கு உண்டான மாண்பை சீர்குலைக்கும்   நடவடிக்கையில் ஈடுபட்டதாக வில்லிம்ஸ் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.