சீமானுடன் பசுபதி பாண்டியன் மகள் சந்திப்பு! நாம் தமிழர் கட்சியில் இணைகிறாரா?
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் பசுபதி பாண்டியன் மகள் சந்தனப்பிரியா சந்தித்துள்ளதாகவும் இதனை அடுத்து நாம் தமிழர் கட்சியில் அவர் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜனவரி 10ஆம் தேதி நடைபெறும் பசுபதி பாண்டியன் குருபூஜை நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்க சீமானை சந்தனப்பிரியா சந்தித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் விஜயகாந்த் நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பசுபதி பாண்டியன் நினைவு தினமான ஜனவரி 10ஆம் தேதி அன்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பல தலைவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சீமானும் வருவார் என்று கூறப்படுகிறது.
ஜனவரி 10ஆம் தேதி பசுபதி பாண்டியன் 12வது நினைவு நாள் அன்று அவரது மகள் சந்தன பிரியா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் சீமானின் நாம் தமிழர் கட்சிகள் இணைவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Edited by Mahendran