வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 30 டிசம்பர் 2023 (06:58 IST)

தவசி படத்துக்கு வசனம் எழுதியது சீமான்தான்… இயக்குனர் உதயசங்கர் பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் நேற்று முன் தினம் காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து பல திரைப்பிரபலங்களும் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட அவரது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது இயக்குனரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அப்போது அஞ்சலி செலுத்தி பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தான் விஜயகாந்த் நடித்த தவசி படத்திற்கு வசனங்கள் எழுதியதாக குறிப்பிட்டிருந்தார். சீமான் இது சம்மந்தமாக பொய் சொல்லுவதாக இணையத்தில் கேலிகளும் ட்ரோல்களும் பரப்பப்பட்டன.

இந்நிலையில் தவசி படத்தின் இயக்குனர் உதயசங்கர் இப்போது இதுபற்றி விளக்கமளித்துள்ளார். அதில் “தவசி படத்துக்கு வசனம் எழுதியது சீமான்தான். ஆனால் அவர் பெயர் இடம்பெற்றிருக்காது. அதற்குக் காரணம் அப்போது இயக்கிய சில படங்கள் தோல்வி அடைந்ததால், இப்போது வசனம் மட்டும் எழுதினால் தன்னை அனைவரும் வசனம் எழுத மட்டும் கூப்பிட்டுவிடுவார்கள் என்று அவர் நினைத்ததுதான்” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் தவசி படத்துக்கு சீமான் வசனம் எழுதிய உண்மை என்பது தெரிய வந்துள்ளது.