செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜூன் 2020 (14:48 IST)

படப்பிடிப்பைத் தொடங்கிய பிரபல இயக்குனர் – வெளியான புகைப்படங்கள்!

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு மலையாளத்தில் படப்பிடிப்புகள் தொடங்க ஆரம்பித்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் உலகெங்கும் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக எந்த படப்பிடிப்பும் நடத்த முடியாத சூழலில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாதிப்புகளை வெகுவாகக் குறைத்துள்ள கேரள அரசு, கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து மலையாள இயக்குநர் கலிட் ரஹ்மானின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. இது சம்மந்தமான புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதுபோலவே ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில அரசுகளும் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.