திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜூன் 2020 (14:39 IST)

இவ்ளோ ஒல்லியா யோகி பாபுவ பாத்து இருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகி பாபு தனது பால்ய கால புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் தற்போதைய நம்பர் 1 நகைச்சுவை நடிகர் என்றால் அது யோகி பாபுதான். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் மற்றும் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் என அனைவரின் படத்திலும் நடித்து வருகிறார். வாரா வாரம் வெளியாகும் படங்களில் எல்லாம் அவர் இருப்பார் என்ற நிலையில் இருக்கிறது இப்போதைய தமிழ் சினிமா.

இந்நிலையில் அவரது பள்ளி கால புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அதில் மிகவும் ஒல்லியாக இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் இவரா யோகி பாபு என ஆச்சர்யமடைந்துள்ளனர். மேலும் பள்ளியில் கிரிக்கெட் அணியில் இருந்த யோகி பாபு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பதும் ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.