1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Paruthiveeran actor passed away wife as well

பருத்தி வீரன் நடிகர் மரணம் - அதிர்ச்சியில் மனைவியும் உயிர் இழப்பு

பருத்தி வீரன் நடிகர் மரணம் - அதிர்ச்சியில் மனைவியும் உயிர் இழப்பு

Paruthiveeran
நடிகர் கார்த்தி அறிமுகமான பருத்தி வீரன் படத்தில் நடித்த நாட்டுப்புற கலைஞர் பாண்டி என்பவர் மரணம் அடைந்தார். அவர் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த அவரின் மனைவியும் உயிரிழந்தார்.


 

 
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியை சேர்ந்தவர் பாண்டி(55). இவர் ஒரு நாட்டுப்புற கலைஞர். பருத்திவீரன், மாட்டுத்தாவணி மற்றும் வெண்ணிலா கபடிக் குழு ஆகிய படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
 
அவர் குடியிருக்கும் பகுதியில் உள்ள ஒருவர் மரணம் அடைந்தார். அவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள சென்ற பாண்டி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. எனவே, அவருடைய குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினர். அப்போது, காரியாபட்டி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பாலத்தின் அருகில் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.  அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை.
 
அவரது உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்த, அவரின் மனைவி பச்சையம்மாள் தீடிரெனெ ஏற்பட்ட நெஞ்சுவலியால் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.
 
அவர்கள் இருவரின் உடலையும் ஒரே தகன மேடையில் எரியூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அவர்கள் இருவரின் மரணம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
About Writer
Murugan