PAN எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி நாள்!.. வருமான வரித்துறை முக்கிய தகவல்!...
பல வருடங்களுக்கு முன்பு PAN என் இல்லாவிட்டால் வங்கி மற்றும் ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளில் பண பரிவர்த்தனை செய்ய முடியாது என்கிற விதியை மத்திய அரசு கொண்டு வந்தது. எனவே பலரும் பேன் கார்டு வாங்கினார்கள். அதேபோல் மத்தியில் பாஜக ஆட்சி ஏற்றதும் ஆதார் கார்டை கொண்டுவந்தார்கள். எனவே தற்போது எல்லோரும் ஆதார் கார்டை பெற்றிருக்கிறார்கள். இந்நிலையில்தான் PAN எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே கூறியது. அதை பின்பற்றி பலரும் ணைத்தார்கள்.
ஆனால் அதில் பலரும் இன்னமும் PAN எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்காமல் இருக்கிறார்கள். எனவேதான் டிசம்பர் 31ம் தேதியான இன்று PAN எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுவரை இணைக்காதவர்கள் 1000 ரூபாய் கட்டணம் செலுத்தி இன்று இரவுக்குள் இணைத்துக் கொள்ளலாம். இணைக்க தவறினால் PAN எண் செல்லாது எனவும் வருமானத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதேநேரம், 2024ம் வருடம் அக்டோபர் 1ம் தேதிக்குப்பின் PAN எண் வாங்கியவர்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை எந்த அபராதமும் இன்றி ஆதார் எண்ணுடன் இணைத்துக்கொள்ளலாம் என வருமானத் துறை தெரிவித்திருக்கிறது.