செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 24 ஜூலை 2019 (16:02 IST)

மாணவரை அடித்து உதைத்து வீடியோ - தொடரும் மாணவர்கள் மோதல்

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே நேற்று நடந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து மாணவர் ஒருவரை அடித்து உதைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களில் இரு தரப்பினரிடையே “யார் ரூட்டு தல?” என்பதில் தகராறு ஏற்பட்டது. அது பின்னர் மோதலாக வெடித்தது. இதில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை பேருந்துக்குள் புகுந்து சரமாரியாக வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாணவர் ஒருவரை சட்டையின்றி நிற்க வைத்து அடித்து உதைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அந்த மாணவரை தகாத வார்த்தைகளால் பேசுவதுடன் ”53 ரூட்டுக்கு ஜே” என்று 108 முறை எழுதும்படி வற்புறுத்துகின்றனர்.
இந்த வீடியோ மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.