திமுக கூட்டணியில் உள்ள ஐ.ஜே.கே. கட்சிக்கு அவர்கள் கேட்ட கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்படாததால் பாரிவேந்தர் அதிருப்தியில் உள்ளதாகத் தெரிகிறது. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாரிவேந்தர் பாஜக கூட்டணியில் கடந்த சில ஆண்டுகளாக இடம்பெற்றிருந்தார். அதனால் இந்த மக்களவைத் தேர்தலிலும் பாஜக இருக்கும் அதிமுக கூட்டணியிலேயே இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்ப்பட்டது. ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக பாரிவேந்தர் திமுக கூட்டணியில் இணைந்தார். அதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும்...