அரசியல் யுக்திகளை கையாண்டு வெற்றி பெற எடப்பாடிக்கு தெரியும்: பா.வளர்மதி
எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் இருந்து பாடம் படித்தவர் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் நேரத்தில் எப்படி எல்லாம் அரசியல் யுக்திகளை கையாண்டு வெற்றி பெற வேண்டும் என்று அவருக்கு மட்டுமே தெரியும் என அதிமுக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி கூறியுள்ளார்.
அதிமுக மகளிர் அணி செயலாளர் வளர்மதி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது தேர்தல் தொடர்பாக அறிவுபூர்வமாக சிந்தித்து முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறந்த முடிவை எடுப்பார் என்று தெரிவித்தார்.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிடம் பாடம் படித்தவர் என்றும் அவருக்கு தேர்தல் நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? எப்படி எல்லாம் அரசியல் செய்ய வேண்டும்? என்னென்ன யுக்திகளை கையாண்டு வெற்றி பெற வேண்டும் என்பது தெரியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி கொடுத்த பேச்சுவார்த்தையை பாமக மற்றும் தேமுதிக நடத்தி வருவதாகவும் திமுகவிலிருந்து பிரிந்து வரும் சில கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணையும் என்றும் கூறப்படுகிறது
Edited by Mahendran