1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 17 ஜூலை 2022 (11:35 IST)

பள்ளி மாணவி மரணம்: இயக்குனர் பா ரஞ்சித் ஆவேச டுவிட்

Ranjith
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் பள்ளி மாணவியின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி குற்றவாளியை உடனே கண்டுபிடித்து தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும்  கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழக அரசே குற்றவாளிகளை கைது செய்! கள்ளக்குறிச்சி, சக்தி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடலில் காயங்கள் இருப்பதாக உடற்கூறு ஆய்வு அறிக்கை தெரிவித்தும் ஏன் பள்ளியின் மேல் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை?