1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 18 ஜூலை 2024 (15:44 IST)

சீமானுக்கு தன் கட்சி ஆரம்பித்த நாள் கூட நினைவில்லையா? திமுக பிரபலம் கிண்டல்..!

Seeman
சீமானுக்கு தன் கட்சி ஆரம்பித்த நாள் கூட நினைவில்லை என்றும் ஜூலை 18ஆம் தேதியான இன்று தான் நாம் தமிழர் கட்சி ஆரம்பித்த நாள் என்றும் உலகிலேயே ஒரு கட்சியின் தலைவருக்கு தனது கட்சி ஆரம்பித்த நாள் கூட தெரியவில்லை என்றும் திமுக பிரபலம் ராஜீவ் காந்தி கிண்டல் செய்துள்ளார். 
 
இவர் ஏற்கனவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
இயக்குனர் சீமான் அவர்களுக்கு இந்த நாள் நியாபகம் இருக்க வாய்ப்பில்லை!
 
2009-ஆம் ஆண்டு ஜீலை-18 இந்தநாளில் தான் நாம் தமிழர் இயக்கம் மதுரையில் ஆரம்பிக்கபட்ட நாள்!!
 
உலகிலேயே இந்த குடிபெருமை கும்பலின் தலைவருக்கு தான்…
தன் கட்சி ஆரம்பித்த நாளும்,தேதியும் தெரியாது …
 
எப்பவும் போல் தான் ஒரு கட்சி தலைவர்னு சொல்லிட்டு  IPS இடமாறுதல், சினிமா பஞ்சாயத்து க்கு கமிசன் வாங்கி கொண்டு தல ரெம்ப பிஸியா இருப்பாபுல… 
 
Edited by Siva