செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 2 நவம்பர் 2018 (17:32 IST)

ப சிதம்பரம் மற்றும் குடும்பத்தினர் மீதான வழக்கு ரத்து

ப சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தொடுக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ப சிதம்பரம் தனது வருமான வரியைத் தாக்கல் செய்யும் போது இலண்டன் கேம்ப்ரிட்ஜ்ஜில் வாங்கிய 5 கோடி மதிப்பிலான சொத்துக்களைப் பற்றிய விவரங்களை மறைத்து விட்டதாகக் கூறி வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவரது பெயரோடு அவர்து மகன் கார்த்தி சிதம்பரம், மனைவி நளினி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி சிதம்பரம் ஆகியோரின் பெயரும் இணைக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பளித்த நீதிபதிகள் கறுப்புப் பண சேர்த்ததாகக் கூறப்பட்ட ப சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தனர்.

ஏர்செல் மேக்ஸிஸ் மோசடி வழக்கில் முறைகேடான பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறப்பட்ட மற்றொரு வழக்கில் ப சிதம்பரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.