1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 9 மே 2017 (13:22 IST)

ஜோதிடம் கூறும் ஓபிஎஸ்: விளாசும் அமைச்சர் மணியன்!

ஜோதிடம் கூறும் ஓபிஎஸ்: விளாசும் அமைச்சர் மணியன்!

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். இதற்கு கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அது நடக்காது என பதிலடி கொடுத்துள்ளார்.


 
 
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சசிகலா குடும்பத்தினர் ஏற்கனவே கட்சியில் இருந்து ஒதுங்கி விட்டதாக கூறியுள்ளனர். எங்களிடம் கட்சியின் 95 சதவீதத்தினர் உள்ளனர். ஓபிஎஸ் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்.
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடக்கும் இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசியல் காரணங்களுக்காக அமைச்சர்கள் மீது போடப்படும் வழக்கை சட்டபடி அமைச்சர் காமராஜ் உள்ளிட்டவர்கள் சந்திப்பார்கள். விரைவில் சட்டமன்ற தேர்தல் வரும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஆனால் அவரின் ஜோதிடம் பலிக்காது என கூறினார் அமைச்சர் மணியன்.
 
பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என கூறிவிட்டு ஓபிஎஸ் ஜோதிடம் கூறுகிறார் என அவரை விமர்சிக்கவும் தவறவில்லை அவர். ஆனால் 95 சதவீத கட்சியினர் தங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என கூறும் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் பிறகு ஏன் தாங்களாக முன்வந்து அடிக்கடி பேச்சு வார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் வாருங்கள் என வாலிண்டியராக செல்கிறார்கள் என அரசியல் வட்டாரத்தில் பேசுகிறார்கள்.