செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2017 (13:00 IST)

தினகரனை பற்றி சசிகலாவிடம் போட்டுக்கொடுத்த அமைச்சர்!

தினகரனை பற்றி சசிகலாவிடம் போட்டுக்கொடுத்த அமைச்சர்!

5 நாட்கள் பரோலில் வந்துள்ள சசிகலா அமைச்சர் ஓ.எஸ்.மணியனுடன் தொலைப்பேசியில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் தினகரன் குறித்து சசிகலாவிடம் போட்டுக்கொடுத்ததாக தகவல்கள் வருகின்றன.


 
 
பரோலில் வந்துள்ள சசிகலா தனது குடும்ப உறுப்பினர்கள் மூலம் தனக்கு ஆதரவான மனநிலையில் உள்ள அமைச்சர்களிடம் போனில் பேச முயற்சிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் சசிகலா அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் பேசியுள்ளார்.
 
அப்போது சசிகலா நீங்கள் செய்வது நியாயமா என கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் தினகரன் மீதான தனது ஆதங்கத்தை சசிகலாவிடம் கொட்டியுள்ளார். கட்சியில் இருக்கும் எல்லோரையும் தினகரன் நீக்கிட்டே இருந்தாரு. கடைசியில் என்னையும் பொறுப்பில் இருந்து நீக்கினாரு. அதுவும் உங்க ஒப்புதலுடன் நீக்குவதாக அறிவிச்சாரு. எனக்கு பதிலாக நியமித்த ஆள் சரியில்லை. அப்புறம் நான் என்ன செய்ய முடியும் என கூறியிருக்கிறார் ஓ.எஸ்.மணியன்.
 
அதற்கு சசிகலா, உங்கள நீக்குனது எனக்குத் தெரியாது என கூறியுள்ளார். மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் உங்க படமே போடக் கூடாதுன்னு சொன்னாரு தினகரன். இப்ப இரண்டு பொதுக்கூட்டத்த கூட்டிட்டு அமைதியாகிட்டார். கூட்டத்த ஏற்பாடு செய்கிற ஆட்கள் யாரும் சரியில்ல என போட்டுக்கொடுத்துள்ளார் ஓ.எஸ்.மணியன். அதன் பின்னர் சசிகலா தினகரனை வரவழைத்து பேசியதாகவும் கூறப்படுகிறது.