வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 27 மார்ச் 2017 (09:31 IST)

ஓபிஎஸ் ஆதரவாளரை தற்கொலை செய்ய வைத்த சசிகலா தரப்பு: ஆர்கே நகரில் பரபரப்பு!

ஓபிஎஸ் ஆதரவாளரை தற்கொலை செய்ய வைத்த சசிகலா தரப்பு: ஆர்கே நகரில் பரபரப்பு!

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் மோதுவதால் அங்கு பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவரை சசிகலா தரப்பு எம்எல்ஏ ஒருவர் திட்டியதால் அவர் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.


 
 
ஆர்கே நகர் நெடுஞ்செழியன் நகரில் வசித்து வந்தவர் கண்ணப்பன் என்பர். இவர் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர்க. இவர் ஓபிஎஸ் அணியின் சார்பாக போட்டியிடும் மதுசூதனன் வெற்றிபெற தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுவந்துள்ளார்.
 
கண்ணப்பன் நேற்று முன்தினம் மதுசூதனனை ஆதரித்து பிரச்சாரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சசிகலா ஆதரவு தங்க தமிழ்செல்வன் என்ற எம்எல்ஏ கண்ணப்பனை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கண்ணப்பன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
கண்ணப்பனின் தற்கொலைக்கு காரணம் சசிகலா ஆதரவு எம்எல்ஏ திட்டியதே காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாச்சியுள்ளனர். சசிகலா ஆதரவு எம்எல்ஏ திட்டியதால் ஓபிஎஸ் ஆதரவாளர் தற்கொலை செய்து கொண்டது ஆர்கே நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.