1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 19 மே 2017 (04:29 IST)

ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்: அதிர்ச்சியில் ஈபிஎஸ்

அதிமுகவின் இரு அணிகளான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் மத்திய அரசின் கடைக்கண் பார்வையை நோக்கி தவமிருந்து வருகின்றன. மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு ஆட்சியை காப்பாற்ற ஈபிஎஸ் அணியும், மத்திய அரசுடன் நல்லுறவு கொண்டு ஆட்சியை கைப்பற்ற ஓபிஎஸ் அணியும் முயற்சித்து வருகிறது.



 


இந்நிலையில் இப்போதைக்கு மத்திய அரசு ஈபிஎஸ் அணிக்கு ஆதரவு கொடுத்து வருவதாகவும், ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் காட்சி மாறலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் நேற்று திடீரென ஓபிஎஸ் டெல்லி கிளம்பியுள்ளார்.

அவர் மத்திய அரசின் அழைப்பின்பேரில் கிளம்பினாரா? அல்லது அவராகவே கிளம்பினாரா? என்பது குறித்து தெரியாததால், ஈபிஎஸ் அணி குழப்பம் அடைந்துள்ளது.

ஓபிஎஸ் அணி தரப்பில் இருந்து அவரது டெல்லி பயணம் குறித்து கூறுகையில், 'ஓபிஎஸ் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பிரதமர் மோடியை சந்திக்கவிருப்பதாகவும், அதன்பின்னர் நேற்று மரணம் அடைந்த மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவேவின் இறுதி சடங்கில் அவர் கலந்து கொள்ளவிருப்பதாகவும் கூறினர்.