திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 3 ஜனவரி 2024 (15:10 IST)

லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி: ஓ.பன்னீர் செல்வம் பேட்டி..!

இன்னும் ஒரு சில மாதத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு  முன்னால் முதலமைச்சர் ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்.
 
அமமுகவுடன் எங்கள் அமைப்பு  இணைந்து பணியாற்றும் சூழல் உள்ளது என்றும் பிரதமர் இடம் நேற்று சந்தித்தபோது அவரிடம் அரசியல் பேசவில்லை என்றும் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்றும் கூறினார். 
 
பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றும் பாஜகவுடன் இணைந்து பணியாற்ற நல்ல சூழல் அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் இபிஎஸ் குறித்த ரகசியத்தை நான் வெளியே சொல்ல முடியாது என்றும் அது தெரிய வேண்டிய நேரத்தில் தானாகவே வெளியே வரும் என்றும் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.
 
மேலும் கொடநாடு சம்பவம் நடந்த போது நாங்கள் இபிஎஸ் உடன் இல்லை என்றும் அதனால் அது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran