1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 29 மார்ச் 2017 (13:24 IST)

சிடி விற்ற சசிகலா, மான்னார்குடியில் பிச்சை எடுத்தவங்க: ஓபிஎஸ் அணியின் கிழிகிழி பிரச்சார வீடியோ!

சிடி விற்ற சசிகலா, மான்னார்குடியில் பிச்சை எடுத்தவங்க: ஓபிஎஸ் அணியின் கிழிகிழி பிரச்சார வீடியோ!

ஆர்கே நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக அம்மா அணியான சசிகலா அணியை சேர்ந்த டிடிவி தினகரனும், அவருக்கு எதிராக அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியான ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுசூதனனும் களம் இறங்கியுள்ளதால் இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது.


 
 
இந்த இரு அணிகளும் வெற்றி பெற தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இரு அணிகளும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆர்கே நகர் தொகுதியில் மதுசூதனனை ஆதரித்து ஓபிஎஸ் அணி சார்பில் பேசிய அதிமுக பெண் கவுன்சிலர் ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

நன்றி: Red Pix

இதில் அவர் சசிகலா, தினகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார். சசிகலாவை சிடி விற்றவர் என்றும் அவரது குடும்பத்தினர் மன்னார்குடியில் பிச்சையெடுத்தவர்கள் எனவும் சகட்டுமேனிக்கு பேசியுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.