புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 25 டிசம்பர் 2019 (11:12 IST)

அன்னப்போஸ்ட்டாக தட்டி தூக்கும் டிடிவி: ஷாக்கான ஓபிஎஸ் தரப்பு!!

டிடிவி தினகரனின் உள்ளாட்சி தேர்தல் யுக்தியால் அதிர்ச்சியில் உள்ளதாம் ஓபிஎஸ் தரப்பு. 
 
தமிழகத்தில் ஊராட்சி அமைப்புகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் களபணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. 
 
உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தயாராகி வருகின்றனர்.  அதேபோல ரஜினி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிவித்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது. 
 
இந்நிலையில், டிடிவி தினகரனின் அமமுக கட்சியாக பதிவு செய்யப்பட்டு உள்ளாட்சி தேர்தலில் பொதுச்சின்னம் வழங்கபடும் என அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கு தயராகி வருகிறது. இதற்கிடையில் டிடிவி தினகரன் தேனியில் 4 - 5 இடங்களை அன்னப்போஸ்ட்டாக பெற முயற்சித்து வருகிறாராம். 
 
தனது சொந்த தொகுதியிலேயே டிடிவி தினகரன் அன்னப்போஸ்ட்டாக வெற்றி பெற முயற்சிப்பதை அறிந்து ஷாக் ஆகி அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனராம் ஓபிஎஸ் தரப்பு.