1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 22 பிப்ரவரி 2017 (14:05 IST)

சின்னம்மாவின் வழியில் என்றால் அவரை போல சிறைக்கு செல்வீர்களா: பதில் சொல்ல முடியலையே மொமண்ட்!

சின்னம்மாவின் வழியில் என்றால் அவரை போல சிறைக்கு செல்வீர்களா: பதில் சொல்ல முடியலையே மொமண்ட்!

மான்புமிகு அம்மாவின் ஆட்சி, மான்புமிகு சின்னம்மாவின் வழியில் இந்த ஆட்சி நடக்கும் என அதிமுகவினர் ஊடகங்கள் முன்னிலையில் கூறுவது தற்போது அதிகமாகிவிட்டது.


 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றமே உறுதி செய்துவிட்டது. அதன் பின்னரும் அதிமுகவினர் ஜெயலலிதா, சசிகலா வழியில் ஆட்சி, அவர்களின் ஆட்சி என கூறிவருவதை பலரும் எதிர்த்து வருகின்றனர்.
 
அதிலும் தற்போது ஆட்சியில் சசிகலா புகழ் பாடுவது அதிகமாகியே வருகிறது. இந்நிலையில் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அதிமுக மாநிலங்களவை உறுப்பினர், சசிகலா அணியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் சின்னம்மா வழியில் ஆட்சி என்று பேசினார்.
 
அதற்கு அந்த விவாத மேடையில் இருந்த மற்றொரு விருந்தினர் கொடுத்த பதிலடிக்கு நவநீதகிருஷ்ணன் பதில் சொல்ல முடியாமல் திணறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

 
 
சின்னம்மா வழியில் ஆட்சி என்கிறீர்களே அவர் யார், அவரது கொள்கை என்ன?, அவர் மக்களுக்காக என்ன செய்தார், அவரது வழி என்ன இப்படி எதுவுமே தெரியாமல் அவரது வழியில் ஆட்சி என ஏன் சொல்கிறீர்கள்.
 
அவர் மக்கள் பணத்தை சதி செய்து திருடிவிட்டு குற்றவாளியாகி சிறையில் இருக்கிறார். அவருடைய வழி என்றால் அவரைப்போல சிறைக்கு செல்வதா உங்கள் வழி என அந்த விருந்தினர் கேட்கும் கேள்விக்கு நவநீதகிருஷ்ணனால் பதில் சொல்ல முடியவில்லை.