திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (08:20 IST)

ஆகஸ்ட் 31ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஆகஸ்ட் 31ஆம் தேதி உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒரு சில முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்படும்போது அந்த மாநிலங்களின் எல்லையில் உள்ள மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது
 
அந்த வகையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அவர்கள் அறிவித்துள்ளார் 
 
ஒணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் ஆகஸ்ட் 31ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்றும் ஓணம் பண்டிகையை கோவை மாவட்ட மக்கள் தனிமனித இடைவெளியுடன் பாதுகாப்புடன் கொண்டாடுங்கள் என்று மாவட்ட ஆட்சியர் ராசாமணி அவர்கள் அறிவித்துள்ளார்
 
ஓணம் பண்டிகையை அடுத்து கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து தங்களது மகிழ்ச்சியை அவர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருவதோடு ஓணம் பண்டிகை வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது