திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (07:01 IST)

மாமியாராக நடிக்கும் சிம்ரன் - எந்த ஹீரோவிற்கு தெரியுமா?

தமிழ் சினிமாவின் 90ஸ் கால கட்டத்தில் தனது இடுப்பசைவால் ஒட்டுமொத்த ரசிகர்களயும் கவர்ந்த நடிகை சிம்ரன். தொடந்து பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் திருமணம் செய்துகொண்டு பின்னர் குடும்ப வாழ்வில் செட்டில் ஆகிவிட்டார்.

பின்னர் சினிமாவிற்கு சில ஆண்டுகள் கேப் விட்டிருந்த சிம்ரன் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸ் கொடுத்தார். 43 வயதாகும் இவர் அழகிலும் இளமையிலும் கொஞ்சம் கூட மாற்றமில்லாமல் அதே துள்ளலுடன் நடித்து மீண்டும் ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார்.

ஆனால், அடுத்தடுத்து அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்புகள் கிடைக்காததால் கிடைக்கும் படவாய்ப்புகளை பயன்படுத்துக்கொண்டு இருக்கும் மார்க்கெட்டை நிலையாக வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார். ஆம், அந்தவகையில் தான் தற்ப்போது தெலுங்கில் அறிமுக நாயகன் ஆகாஷ்பூரி நடிக்கவுள்ள "ரொமான்டிக்" என்ற புது படத்தில் ஹீரோவிற்கு மாமியாராக நடிக்க கமிட்டாகியுள்ளாராம். இது தமிழ் சினிமாவின் 90ஸ் ரசிகர்கரை சற்று வருத்தமடைய வைத்துள்ளது.