வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (15:03 IST)

சென்னையில் மட்டும் 50% கொரோனா தொற்று பதிவு: அமைச்சர் தகவல்

ma subramanian
தமிழகத்தில் பதிவாகும் மொத்த கொரோனா கேஸ்களில் சென்னையில் மட்டும் 50 சதவீதம் பதிவாகி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
தினந்தோறும் தமிழகத்தில் ஏற்படும் கொரோனா பாதிப்பில் 50% சென்னையில் மட்டுமே பதிவாகி வருகிறது, அதுமட்டுமின்றி சென்னையை சுற்றியுள்ள செங்கல்பட்டு திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகமாகப் கொரோனா பதிவாகியுள்ளது.
 
எனவே சென்னை உள்பட 4 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு ஏற்படும் என்றும் கொரோனா பாதிப்பால் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருபவர்களில் நலன் குறித்து அவ்வப்போது விசாரணை செய்யப்படும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார்