1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. India Corona cases 13,313 today

13,000-த்தை கடந்த கொரோனா பாதிப்பு: இந்திய நிலவரம்!

India
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மெல்ல அதிகரிக்க தொடங்கிய நிலையில் இன்று அதிகரித்த வண்ணமே உள்ளது. 
 
கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியது. முன்னதாக ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் தற்போது அதிகரித்து வருகிறது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,313 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,33,34,958 ஆக உயர்ந்தது. புதிதாக 38 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,941 ஆக உயர்ந்தது. 
 
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 10,972 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,27,36,027 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 83,990 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
இந்தியாவில் 1,96,62,11,973 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 14,91,941 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
இலங்கை பொருளாதார நெருக்கடி: ரணிலுக்கு எதிராக திரும்பிய போராட்டம் - காரணம் என்ன?