லோன் கட்டாததால் ....பெண்ணின் அந்தரங்க போட்டோகளை அனுப்பிய ஆன்லைன் கும்பல் !
சென்னையில் வசித்து வந்த இளம்பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கொரொனா காலக்கட்டத்தில் சிரமம் ஏற்படவே கையில் உள்ள பணத்தைக் கொண்டு செலவழித்துள்ளார்.
ஆனால் பணம் இல்லாமல் போகவே ஆன்லைன் அப்ளிகேசன் மூலம் சில முயற்சிகள் எடுத்துள்ளார்.
ஐ கிரிடிட் என்ற அப்ளிகேசனில் அவர் 20000ரூபாய் லோன் பெற்றுள்ளார்., அதாவது 7000 வட்டியுடன் அடுத்த ஏழு நாட்களில் திரும்பச் செலுத்துவதற்காக ஆப்சனை அவர் தேர்வு செய்திருந்ததால் சில தினங்களில் பணம் கட்டத்தவறிவிட்டார்.
அவருக்கு பணம்கட்டச் சொல்லித் தொலைப்பேசி அழைப்புகள் வந்துள்ளது. மேலும் அந்தப் பெண்ணின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அவர் குறித்த அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளனர். அதாவது லோன் கொடுத்து கட்டமுடியாமல் போனால் இதுபோல் செயல்பட்டு பணம் வசூலிப்பதை அந்த அப்ளிகேசன் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
அந்தப் பெண் இதுகுறித்து நுகர்வோர் பாதுக்காப்பு மையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.