1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: சனி, 23 நவம்பர் 2019 (09:38 IST)

மீண்டும் உயர்ந்தது “வெங்காயம்” விலை..

தமிழகத்தில் வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

சமீபத்தில் வெங்காய விலை உயர்ந்ததை தொடர்ந்து மீண்டும் வெங்காய விலை உயர்ந்துள்ளது. தற்போது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.70 க்கும் சின்ன வெங்காயம் ரூ.100 க்கும் விற்கப்படுகிறது.

திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளில் சின்ன வெங்காயம் ரூ.110க்கும், பெரிய வெங்காயம் பெரிய வெங்காயம் ரூ.80க்கும் விற்கப்படுகிறது. கோவையில் வெங்காய விளைச்சல் சிறப்பாக உள்ளதால், மற்ற நகரங்களை விட சுமார் 40 ரூபாய் குறைவாக விற்கப்படுகிறது.

மேலும் வெங்காய விலையை கட்டுபடுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்ட நிலையில், வெளிநாடுகளில் இருந்து 1.2 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதற்கு இப்புதல் வழங்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.