திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 8 நவம்பர் 2022 (09:38 IST)

100 ரூபாயை தாண்டியது சின்ன வெங்காயத்தின் விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி!

sambar onion
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சின்ன வெங்காயம் கிலோ 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் 120 ரூபாய் என விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கடந்த 10 நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் நாகர்கோவில் சந்தையில் இன்று ஒரு கிலோ 120 ரூபாய்க்கு சின்னவெங்காயம் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது 
 
தொடர் மழை காரணமாக வெங்காய வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாகவும் இன்னும் சில நாட்களில் வெங்காயத்தின் விலை அதிகரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
அனைவரும் விரும்பி சாப்பிடும் வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாய்க்கு மேலாக அதிகரித்துள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.யை
 
Edited by Siva