இன்று முதல் ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் தொடங்கி வைக்கின்றார்
ஒரே நாடு ஒரே தேசம், ஒரே நாடு ஒரே மொழி என்ற வரிசையில் ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டம் இன்றுமுதல் தமிழகத்தில் நடைபெற அமல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியில் உள்ள நியாய விலை கடைகளிலும் எந்த மாநிலத்தைச் சேர்ந்த வரும் ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த திட்டத்தில் தமிழகம் உள்பட இதுவரை 25 மாநிலங்கள் இதுவரை இணைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 9 கோடி ரேஷன் அட்டைகள் உள்ள நிலையில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த திட்டம் சோதனை முறையில் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது/ இந்த சோதனை முறையில் கிடைத்த வெற்றியை அடுத்து இன்று முதல் 32 மாவட்டங்களில் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது
இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் காணொளி மூலம் இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். ஸ்மார்ட் ரேஷன் அட்டை வைத்துள்ளவர்கள் இனிமேல் தமிழகத்தில் எந்த நியாய விலை கடைகளிலும் அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வாங்க முடியும். ஒரு குறிப்பிட்ட கடையில் தான் வாங்க வேண்டும் என்ற நிபந்தனை இனி கிடையாது
அதுமட்டுமின்றி வேறு மாநிலங்களில் ரேஷன் கார்டுகளை வைத்திருப்பவர்களும் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம். அதேபோல் ஒருவரே இரண்டு மாநிலங்களில் ரேஷன் கார்டுகள் வைத்திருப்பது தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு பட்டியலில் குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் ரேஷன் பொருட்களை வாங்க முடியாது. இவ்வாறு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்