திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (13:43 IST)

தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை !

Fire
தர்மபுரியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டில் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்த 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் முனிரத்னம் என்பவரை காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக வாக்குமூலத்தில் மாணவி தெரிவித்துள்ளார்.

அவரது கதறல் குரல் கேட்டு ஓடி வந்த அருகில் வசிப்போர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படியில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.