1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (11:04 IST)

திமுக கூட்டணியில் இணைந்த மற்றொரு கட்சி!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளுக்கு கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளன. 
 
அதிமுக, பாஜகவிற்கு 5 தொகுதி, பாமகவிற்கு 7 தொகுதி என தொகுதி பங்கீட்டை வெற்றிகரமாக முடித்தாலும், தேமுதிக முரண்டு பிடிப்பதால் அந்த கட்சியுடனான தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ளது. 
 
திமுக காங்கிரசுடன் கூட்டணியை உறுதி செய்து, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 தொகுதி என மொத்தம் 10 தொகுதிகளை வழங்கியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதிகளை வழங்கியுள்ளது.
 
இந்நிலையில் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதியை கொடுத்து,  திமுக அவர்களை தங்கள் பக்கம் இழுத்துள்ளது.