1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. master plan to coimbatore city says mk stalin

கோவை மாநகருக்கு 'மாஸ்டர் பிளான்' திட்டம்: முதல்வர் அறிவிப்பு!

stalin
கோவை மாநகருக்கு மாஸ்டர் பிளான் திட்டம் கொண்டு வரப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார் 
 
இன்று கோவையில் தொழிலதிபரான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டபோது கோவை மாநகருக்கு மாஸ்டர் பிளான் திட்டம் உருவாக்கப்படும் என்றும் கோவை மக்கள் தொடாத துறையே இல்லை என்றும் அவர்கள் தொட்டும் துலங்காத துறை இல்லை என்றும் புகழாரம் சூட்டினார் 
 
ஜவுளி, பொறியியல், ஆட்டோமொபைல் என பல தொழில்களுக்கும் சிறந்த நகரமாக இருக்கும் கோவையை மேலும் மேம்படுத்த மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார், அவரது இந்த அறிவிப்பு கோவை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
மதிய உணவாக மாட்டிறைச்சி கொண்டு வந்த ஆசிரியர் மீது போலீஸ் புகார்!