விடுதி சிறுமிகளுக்கு மது கொடுத்து வன்கொடுமை! – கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!
கேரளாவில் பள்ளி விடுதிக்குள் நுழைந்து சிறுமிகளுக்கு மது கொடுத்து வன்கொடுமை செய்த 2 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கடினம்குளத்தில் உள்ள கான்வெண்ட் ஒன்றில் கடந்த சில தினங்கள் முன்னதாக ஆசாமிகள் சிலர் தாவி குதித்ததை அப்பகுதியில் இரவு நேர காவல் பணியில் இருந்த போலீஸார் கண்டுபிடித்தனர். அந்த இரண்டு பேரையும் கைது செய்து விசாரித்ததில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருவரும் கான்வெண்ட் விடுதிக்கு சென்று அங்குள்ள சிறுமிகள் சிலருக்கு மது கொடுத்து மயக்கமாக்கி பின்னர் அவர்களை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பெண் போலீஸார் அந்த கல்வி நிறுவனத்திற்கு சென்று அங்குள்ள சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டதில் நீண்ட காலமாக இப்படி வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளது தெரிய வந்துள்ளது.
சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வன்கொடுமை சம்பவத்தில் மேலும் சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கும் நிலையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.