Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் ஆம்னி பேருந்து இயங்காது... சென்னை திரும்பும் பொதுமக்களுக்கு சிக்கல்..!

Written By Siva
Updated: செவ்வாய், 24 அக்டோபர் 2023 (08:20 IST)
இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ள நிலையில் இன்று மாலை சென்னை திரும்பும் பொது மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிக்குச் சென்ற பொதுமக்கள் இன்றும் மாலை முதல் சென்னை திரும்ப உள்ளனர். 
 
இந்த நிலையில் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென்மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதிக கட்டண வசூல் என கூறி 120 பேருந்துகளை சிறைபிடிக்கப்பட்ட நிலையில் அந்த பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என்றார் கோரிக்கையை வலியுறுத்தி ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனால் ஏற்கனவே ஆம்னி பேருந்துகளில்  முன்பதிவு செய்தவர்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

75 நாடுகளுக்கு விசா வழங்குவதை தடை செய்த அதிபர் டிரம்ப்.. தடையை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்...

மாணவியிடம் சிரித்து பேசிய மாணவன்.. ஆசிரியர் கண்டித்ததால் எடுத்த விபரீத முடிவு..

இந்தியா கூட்டணியில் இணைவது குறித்து தேர்தலுக்கு பின் முடிவு: நிர்மல் குமார்

கேரளாவில் தவெகவுக்கு பலம் சேர்க்கும் நடிகர் தேவன்? விஜய்யை சந்திக்கிறார்!

கருணாநிதி நின்னுருந்தாலும் தோக்கடிச்சிருப்பேன்!.. வி.எஸ்.பாபு பேட்டி...

அடுத்த கட்டுரையில்
Show comments