1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 28 ஜனவரி 2022 (13:33 IST)

தனது மருத்துவ இடத்தை விட்டுக்கொடுத்த ஆசிரியர்! – கலந்தாய்வில் ஆச்சர்யம்!

நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியர் தனது மருத்துவ இடத்தை விட்டுக் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நேற்று முதலாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 61 வயது ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் சிவப்பிரகாசம் என்பவரும் கலந்து கொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தனக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடத்தை வேறு மாணவருக்கு விட்டுக்கொடுப்பதாக சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “டாக்டராக வேண்டும் என்பது எனது சிறுவயது ஆசை. வயது உச்சவரம்பு இல்லாததால் நீட் தேர்வு எழுதினேன். எனினும் எனது வாய்ப்பை வேறு மாணவருக்கு விட்டுக் கொடுக்கிறேன்” என கூறியுள்ளார்.