வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 25 நவம்பர் 2017 (16:40 IST)

காரை விட்டு மோதிய வாலிபர் ; அசால்ட்டாக தப்பித்த முதியவர் - வைரல் வீடியோ

தன் மீது வாலிபர் ஒருவர் காரை விட்டு மோதிய போது, முதியவர் ஒருவர் லாவகமாக உயிர் தப்பிய வீடியோ வைரலாகியுள்ளது.


 
மதுரை நெடுஞ்சாலையில், 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் காரை ஒரு வாலிபர் இடித்து விட்டு நிற்காமல் சென்றுவிட்டார். அந்த வாலிபரை மடக்கிப்பிடித்த முதியவர், அவரிடம் தன்மையாக பேசியும், திமிராக நடந்து கொண்ட அந்த வாலிபர், அந்த முதியவர் மீது காரை மோதிவிட்டு சென்றார். 
 
ஆனால், அந்த முதியவர் அசால்ட்டாக தாவி அந்த விபத்தில் இருந்து தப்பினார். அதன் பின் அங்கிருந்த சிசிடிவி கேமரா ஆதாரம் மூலம், அந்த வாலிபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கொலை முயற்சியின் கீழ் வழக்குப்பதிவு செய்த  போலீசார், தலைமறைவான வாலிபரை தேடி வருகின்றனர்.
 
அந்த முதியவரின் பெயர் இக்பால்(60) என்பதும், மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் பயிற்சி வழக்கறிஞராக அவர் பணிபுரிந்து வருவதும் தெரியவந்துள்ளது. அதை விட முக்கியமானது, அவர் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.