1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 22 ஜூலை 2023 (13:25 IST)

முதியோர் ஓய்வூதியம் ரூ.1000- ல் இருந்து ரூ1200 ஆக உயர்வு- அமைச்சர் தங்கம் தென்னரசு

thangam thennarasu
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் பல மக்கள் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதியோர் ஓய்வூதியம் ரூ.1000- ல் இருந்து ரூ1200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1000- ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கைம்பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக 3 கட்டங்களாக முகாம்கள் நடத்தப்படவுள்ளன. வரும் திங்கட்கிழமையில் இருந்து கலைஞரின் மகளிர் உரிமைத் தொகைக்கான முகாம்கள் நடத்தப்படும்,  மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியான அனைத்து மகளிர்க்கும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.